மண்டையில இருக்க கொண்டையை மறைங்க சார்.. மேடையில் தெறிக்க விட்ட தளபதி

விஜய் அரசியல் களத்திற்கு வந்த நாள் முதலில் இருந்து அவரைப் பற்றிய விமர்சனங்கள் ஆரம்பித்து விட்டது. அதிலும் ஆளும் கட்சி பற்றி இவர் வெளிப்படையாக விமர்சித்ததும் எதிர்த்ததும் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது.

அதை அடுத்து மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் விஜய்யை விமர்சிக்க தொடங்கினார்கள். அதேபோல் ஆளும் கட்சி இப்போது தமிழக வெற்றி கழகத்தை டார்கெட் செய்து இறங்கியுள்ளது.

இதயும் தளபதி ஒவ்வொரு மேடையிலும் பதிவு செய்து வருகிறார். இப்படி அவருடைய அரசியல் நகர்வு ஏறுமுகமாக இருந்தது. ஆனால் அதில் கரும்புள்ளி வைத்தது போல் கரூரில் நடந்த துயர சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் டிவிகே மதிப்பு பெருமளவு குறைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதை மற்ற அரசியல் கட்சிகள் சாதகமாக எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தொடங்கியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது விஜய் மீண்டும் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். அதன்படி இன்று ஈரோட்டில் மக்களை சந்தித்து அவர் பேசி வரும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக இருக்கிறது.

அதில் ஆளும் கட்சிக்கு எதிராக பேசியிருக்கும் வீடியோ தான் ஹைலைட். அதில் அண்ணா எங்களுடையது எம்ஜிஆர் எங்களுடையது என சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. அதே மாதிரி உங்களுக்கு டிவிகே காட்சியை ஒரு பொருட்டே கிடையாதுன்னு சொல்லிட்டீங்க.

அப்புறம் எதற்காக எங்களை பார்த்து பயப்படுறீங்க. எங்களுக்கு பயமே கிடையாதுன்னு சொன்னாலும் பேஸ்மென்ட் வீக் போல் இருக்கிறது என நக்கலாக சிரித்தபடி மேடையை தன் பேச்சால் அதிரவிட்டார்.

அதேபோல் முதல்ல மண்டை மேல இருக்கிற கொண்டையை மறைங்க சார் என கிண்டலாக பேசினார். அவருடைய இந்த பேச்சைக் கேட்டு ஒட்டுமொத்த கூட்டமும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.