டிஆர்பிஇல் முதல் 5 இடத்தில் மண்ணை கவ்விய விஜய் டிவி சீரியல்கள்.! தட்டித்தூக்கிய சன் டிவி சீரியல்கள்.

தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி இல் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புதிய புதிய சீரியல் புதிய புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பல சீரியல்கள் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து டிஆர்பிஇல் நல்ல ரேட்டிங் பிடித்து வந்தது.

ஆனால் விஜய் தொலைக்காட்சியை விட சன் தொலைக்காட்சி தான் சீரியலில் முதல் ஐந்து இடத்தை பிடித்து வந்தது அந்த வகையில் சன் தொலைக்காட்சியில்  முதலிடத்தில் கயல் சீரியலும் இரண்டாவது இடத்தில் சுந்தரி சீரியல், மூன்றாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல், நான்காவது இடத்தில் கண்ணான கண்ணே சீரியலும், ஐந்தாவது இடத்தில் ரோஜா சீரியல் இடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து ஐந்து இடங்களை சன் தொலைக்காட்சி பெற்றுவிட்டதால் மற்ற தொலைக்காட்சிகளுக்கு இடமே விடாமல் ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு முன்பு ஒரு சில சீரியல்கள் முதல் ஐந்து இடத்தில் முக்கிய இடத்தில் பிடித்து விடும் ஆனால் கடந்த சில வாரங்களாக விஜய் தொலைக்காட்சி சீரியல் டல்லடித்து வருகிறது அதனால் முதல் ஐந்து இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் ஒரேடியாக பின் தாங்கி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா என அனைத்து சீரியல்களும் பின்வாங்கி விட்டது இந்த நிலையில் ஆறாவது இடத்தில் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலும் ஏழாவது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் எட்டாவது இடத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் ஒன்பதாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 10வது இடத்தில் ராஜா ராணி சீரியல் இருக்கிறது.

இப்படியே போனால் விஜய் தொலைக்காட்சி டாப் டென் லிஸ்டில் கூட இடம் பிடிக்காத நிலைமை ஏற்படும் அதனால் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி சீரியல்களில் ரசனையை அதிகரிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இன்னும் இரண்டு வாரங்களில் விஜய் டிவி சீரியல்கள் பெரும் சரிவை சந்திக்கும் டிஆர்பிஎல்.

Leave a Comment

Exit mobile version