தீபாவளியில் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காக புதுபுது திரைப்படத்தை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்கள்.! இதோ தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்..

0

deepavali movies on televiseion video: இந்த வருடத்திற்கான தீபாவளி பண்டிகை இன்னும் ஓரிரு தினங்களில் வர இருக்கிறது அதனால் கடைகள், மால்கள், கடைத்தெரு, பட்டாசு கடைகள் என கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதுகிறார்கள்.

கொரோனா என்ற பயமில்லாமல் சமூக இடைவெளியை யாரும் கடை பிடிப்பது போல் தெரியவில்லை, மக்கள் பலரும் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டார்கள், அதேபோல் மக்கள் பலரும் புது உடை இனிப்பு என அனைத்தையும் வாங்க ஆரம்பத்து விட்டார்கள்.

தீபாவளிக்கு எப்படி மக்களுக்கு பட்டாசு முக்கியமானதோ அதேபோல் தொலைக்காட்சியில் படங்களும் மக்களுக்கு விருந்தாக அமைகிறது.

இந்த நிலையில் பல தொலைக்காட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், trp யில் முதலிடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது அதனால் எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகவில்லை இந்தநிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் மீண்டம் இதற்கு முன் வெளியாகிய திரைப் படங்களை ஒளிபரப்ப இருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

அதே நேரத்தில் புதிய படங்களை ஒளிபரப்பி ஆகவேண்டும் என பல தயாரிப்பாளர்கள் முதல் இயக்குனர்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பல தொலைக்காட்சிகள் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

அந்தவகையில் சன் தொலைக்காட்சி பிகில் திரைப்படத்தையும் விஜய் தொலைக்காட்சி வானம் வசப்படும் திரைப்படத்தையும் ஜீ தமிழ் தொலைக்காட்சி என்னை நோக்கி பாயும் தோட்டா , நான் சிரித்தால் ஆகிய திரைப் படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

இதனை அதிகாரப்பூர்வமாக அந்தந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள்.