டி ஆர் பி-யில் சன் தொலைக்காட்சியை தூக்கி சாப்பிட்ட பிரபல டிவி சேனல்.! ரசிகர்கள் ஆச்சரியம்

இந்திய தொலைக்காட்சிகளிலேயே டி ஆர் பி யில் எப்பொழுதும் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். இந்த சன் தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ள பல டிவி சேனல்கள் புதிதுபுதிதாக ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பி பார்ப்பார்கள்.

ஆனால் அதற்கும் ஈடுகட்டி சன் தொலைகாட்சி எப்பொழுதும் முதலிடத்தில் இருந்து வந்தது, அந்தவகையில் கடந்த வாரம் சன் தொலைக்காட்சி இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தான். ஏனென்றால் முதலிடத்தில் இருப்பது டிடி நேஷனல்.

டிடி நேஷனல் முதலிடத்தை பிடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது ஏனென்றால் கேபிள் டிவி வந்த பிறகு யாரும் டிடி நேஷனல் சேனலை விரும்பிப் பார்ப்பது இல்லை, ஆனால் இந்த முறை டிடி நேஷனல்  முதலிடத்தில் வந்திருப்பது பலருக்கு ஆச்சரியம் தான்.

டிடி நேஷனல் முதலிடத்திற்கு வந்ததற்கு காரணம், டிடியில் ஒளிபரப்பப்பட்ட ஹிட்டடித்த சக்திமான் சீரியலை மறு ஒளிபரப்பு செய்தார்கள் அதனால்தான் டிடி சேனல் முதல் இடத்தில் வந்துள்ளது.

dd national

Leave a Comment

Exit mobile version