சமீபத்தில் திருட்டு வழக்கில் இரண்டு டிவி நடிகைகளை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே கொரோனா தாக்கம் அதிக அளவு ஆனதன் காரணமாக நம் நாட்டில் பல்வேறு இடத்தில் ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருவது மட்டுமல்லாமல் பல்வேறு தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டு விட்டது. அதிலும் சினிமா நிறுவனம் பெரிதும் பாதித்ததன் காரணமாக பிரபலங்கள் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டு வருகிறார்கள்.
தற்போது இந்த ஊரடங்கு பெற்றதன் காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் நடக்கவில்லை இதனால் சின்ன சின்ன நடிகர்-நடிகைகள் பெரிதும் வறுமையில் தள்ளப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் மும்பையில் உள்ள ஆரே காலணியில் ஒரு விடுதி உள்ளது.
அதில் பிரபல டிவி நடிகைகள் வசித்து வந்து கொண்டே இருந்தார்கள். அந்த வகையில் தற்போது அந்த விடுதியிலிருந்து 3 லட்சம் திருடு போய் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின் மூலமாக சுரபி மற்றும் மொசினா அய்ய ஆகிய இரண்டு டிவி நடிகைகள் தான் பணத்தை திருடி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு இவர்கள் பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய போது அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்து போலீசார் இவர்களை கைது செய்துள்ளார்கள். இந்த இரண்டு நடிகைகளும் சாவ்தான் இந்தியா மற்றும் க்ரைம் ரோந்து போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்களிடையே முகம் காட்டியவர்கள்.

இவ்வாறு வசமாக சிக்கிய இரு நடிகைகளும் அவர்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைந்து விட்டார்கள் மேலும் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி வரை அவர்களை காவல் நிலையத்தில் தங்க வைத்து அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் போவதாக கூறி உள்ளார்கள்.
இதே போல தான் சில நாட்களுக்கு முன்பாக இரு நடிகைகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததை தெரிந்துகொண்ட ஒரு கும்பல் அவர்களை வைத்து வேறு வழியில் சம்பாதித்து வந்தார்கள் இதனைத் தொடர்ந்து இப்படி ஒரு சம்பவம் நேரிட்டது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.