“திருச்சிற்றம்பலம்” படம் பிளாக்பஸ்டர் வெற்றி..! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு – வெளியான புகைப்படம்.

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே ஹீரோவாக அறிமுகமாகி பல வெற்றி தோல்வி படங்களை கொடுத்து தற்போது உச்ச நட்சத்திர நடிகராகத் திகழ்ந்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளன பல படங்கள் வெற்றியும் அடைந்தன.

அந்த வகையில் தனுஷ் இயக்குனர் மித்ரன் ஜவகர் உடன் இணைந்து.. குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார். இந்த மூன்று படங்களுமே தனுஷ் கேரியரில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது. இந்த படங்களை அடுத்து தனுஷ் பல வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து  நடித்து வெற்றி கண்டுள்ளார்.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மித்ரன் ஜவகர் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது மற்றும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் செம டிரெண்டிங்கில் இருக்கின்றன. படம் வெளிவந்து ஒரு வாரமே ஆகின்ற நிலையில் 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பட குழு மற்றும் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தனுஷ் மற்றும் திருச்சிற்றம்பலம் படக் குழுவினர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் இயக்குனர் மித்ரன் ஜவகர் மற்றும் சிலர் இருக்கின்றனர்.

dhanush
dhanush
dhanush
dhanush
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment