டிஆர்பி யில் ஆட்டிப்படைத்த பிச்சைக்காரன்.! கடந்த வாரத்தில் டாப்-5 டிஆர்பி இதுதான்.!

சின்னத்திரையை பொருத்தவரை டிஆர்பி பொருத்துதான் எந்த தொலைக்காட்சி முதலிடத்தில் இருப்பது என்பதை அறிய முடியும். அதனால் தொலைக் காட்சிகளுக்கு இடையே டிஆர்பிஎல் மிகப்பெரிய போட்டி இருக்கும். டிஆர்பி யில் முதல் இடம் பிடிப்பதற்காக பல தொலைக்காட்சிகள் புதிய சீரியல்கள், புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம் தான்.

நீண்டகாலமாக டிஆர்பி உச்சத்திலிருக்கும் தொலைக்காட்சி என்றால் சன் தொலைக்காட்சி தான், அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்கள் மற்றும் சீரியல்கள் தான் டி ஆர் பி யில் மிரட்டி வருகின்றது, இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இப்படியிருக்க கடந்த வாரம் 4 இடங்கள் டிஆர்பி லிஸ்டில் சன் தொலைக்காட்சி நிறுவனம் தான் பிடித்துள்ளது.

அதில் பல முறை ஒளிபரப்பப்பட்ட பிச்சைக்காரன் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது, பிச்சைக்காரன் திரைப்படத்தை எப்பொழுது ஒளிபரப்பினாலும் ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அதனால் முதல் இடத்தைப் பிடித்துவிட்டது இதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ரோஜா சீரியல் இரண்டாவது இடத்திலும்.

ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் செம்பருத்தி சீரியல் மூன்றாவது இடத்திலும், அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நாயகி மற்றும் கல்யாண வீடு ஆகிய சீரியல்கள் அடுத்த அடுத்த இடத்தை பிடித்த நிலையில். சீரியல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சித்தி 2 இன்னும் டாப் 5 இடங்களுக்குள் வராதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

இந்த நிலையில் இந்த வாரம் டிஆர்பி யில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வரும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

trp
trp

Leave a Comment