நயன்தாராவை ஓரங்கட்ட இதுதான் சரியான நேரம்.. அடுத்தடுத்த 5 படங்களில் கமீட்டான த்ரிஷா

0
nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும்  திரிஷா.  20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த 96, பொன்னியின் செல்வன் மற்றும் ராங்கி போன்ற படங்கள் வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்தடுத்த 5 டாப் ஹீரோகளின் படங்களில் புக் ஆகியுள்ளார் இதனால் நயன்தாராவின் இடத்தை இவர்  பிடிப்பார் என சொல்லப்படுகிறது.

1. பொன்னியின் செல்வன் 2 : முதல் பாகத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷா மிரட்டினார் அதனை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் வெகுவிரைவிலேயே வெகு விரைவிலேயே வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 2. இந்தியன்  2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது

ஆனால்  தொடர்ந்து படப்பிடிப்பில்  அசம்பாவிதங்கள் ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்பொழுது மீண்டும் சூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் ஹீரோயின்னாக காஜல் அகர்வால் நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது இந்த படத்தில் அவருக்கான காட்சிகள் குறைக்கப்பட்டதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது அவருக்கு பதிலாக திரிஷா தற்பொழுது நடிக்க இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

3. தளபதி 67 விஜய் உடன் ஆதி, குருவி, திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் ஹீரோயின்னாக நடித்த திரிஷா ஐந்தாவது முறையாக தளபதி 67 திரைப்படத்தின் மூலம் விஜயுடன் இணைய உள்ளார் அந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாக இருப்பதால் த்ரிஷா படத்தில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. விண்ணைத் தாண்டி வருவாயா 2 : கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுக்க வேண்டுமென பலரும் கேட்டுக் கொண்ட நிலையில் ஒரு வழியாக விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாவது  உருவாக இருக்கிறது இதிலையும் ஹீரோயின்னாக திரிஷா தான் நடிகை இருக்காராம்.

5. சூர்யா 44 : நடிகை திரிஷா சூர்யா உடன் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வகையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க  சூர்யாவின் 44வது திரைப்படத்தில் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.