தளபதியை வளைத்து போட பார்க்கும் திரிஷா.! வெளுத்து விட்ட குடும்பத்தார்.. ஊசி இடம் கொடுத்தால்தான் சார் நூல் நுழையும் …

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்போது விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படபிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் மற்றும் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. அந்த வகையில் லியோ திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, பிரியம் ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷா அவர்கள் விஜயுடன் இணைந்து இருப்பது இந்த திரைப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் திரிஷா அவர்கள் விஜய்யிடம் அதிகம் நெருக்கம் காட்டி வருவதாக பல தகவல் வெளியாகி வருகிறது. இந்த தகவல் அரசல்புரசலாக சங்கீதாவின் காதில் போய்விழவே விஜயன் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பட குழுவினர் அனைவரும் சேர்ந்து காஷ்மீரில் தனி விமானத்தில் செல்லும்போது கூட நடிகை திரிஷா விஜயின் அருகாமையில் உட்கார்ந்து இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் பூஜையின் போதும் நடிகை திரிஷா அவர்கள் விஜயின் பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்பார் இதனால் பல ஊடகங்களில் இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் த்ரிஷா தளபதி விஜய்யை வளைத்து போட பார்கிறார என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனைப் பார்த்த விஜய் குடும்பத்தினர் திரிஷாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் படகுழுவினரும் குழம்பிபோய் இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் காஷ்மீரில் அதிக குளிர் இருப்பதால் படக்குழு சென்னை திரும்பியதாக கூறப்பட்டது இதனை தொடர்ந்து தற்போது பட குழு லண்டனில் சில காட்சிகளை எடுக்க சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment