வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனது அயராத உழைப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை த்ரிஷா இவரது நடிப்பில் தற்பொழுது பல திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தை கொண்டு நடித்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான் இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பணியாற்றும் பல இயக்குனர்களும் பொன்னியின் செல்வன் கதையை வைத்து படமாக்க முயற்சி செய்தார்கள் ஆனால் தற்பொழுது மணிரத்னம் மிக பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இதில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவும் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்து வருவதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் தாய்லாந்தில் படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது பின்பு ஊரடங்கு பிரச்சனையால் படப்பிடிப்பு தற்பொழுது ஹைதராபாத் மற்றும் பாண்டிச்சேரி என இந்தியாவிற்குள் நடந்து வந்ததை நாம் பார்த்திருப்போம்.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்பொழுது மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறதாம் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் வரும் 2022 ல் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை த்ரிஷா ஒரு புகைப்படம் மற்றும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இவர் பதிவு செய்ததை பார்த்த ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் விறுவிறுப்பாக நடந்து முடிந்தால் எங்களுக்குப் போதும் என கூறி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் த்ரிஷா இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்க்க நாங்கள் மிக ஆவலாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.