“96” படத்தில் லிப் லாக் அடிக்க ரெடியான திரிஷா.. இயக்குனர் சொல்லியும் மறுத்த விஜய் சேதுபதி.! ஒளிந்து இருக்கும் மர்மம்.

தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் என எதுவாக இருந்தாலும் தனக்கு அது பிடித்துவிட்டால் எதையும் பார்க்காமல் நடிப்பதே விஜய் சேதுபதியின் பழக்கமாக இருக்கிறது அதை இன்று வரையிலும் பின்பற்றி வருகிறார்.

இதனால் விஜய் சேதுபதியின் சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கூட வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி திரிஷா இணைந்து நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96.

இந்த படம் முழுக்க முழுக்க பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் 22 வருடங்கள் கழித்து மீண்டும் அவர்கள் சந்திக்கும் போது அதே காதல் இருந்ததா என்பது குறித்து எடுக்கப்பட்ட திரைப்படமாக இது இருந்தது இது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப் போன படமாக அமைந்ததால் நன்றாக ஓடி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தின் இயக்குனர் ஒரு காட்சியில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் லிப் லாக் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருக்க வேண்டும் என சொல்லி உள்ளார் முதலில் திரிஷாவுக்கு கட்டளை போட்டுள்ளார் லிப் லாக் காட்சிகளில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார் ஒரு கட்டத்தில் திரிஷாவும் ஒகே சொல்ல பின் விஜய் சேதுபதியுடன் இந்த காட்சியில் நீங்கள் நடிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

ஆனால் கதையை நன்கு அறிந்திருந்த விஜய் சேதுபதி இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்தே நகர்கிறது இந்த இடத்தில் தேவையில்லாமல் லிப்-லாக் காட்சிகள் வைத்தால் அது படத்தின் தரத்தை குறைத்துவிடும் எனவே பல காட்சிகள் வேண்டாம் என கூறி உள்ளார். ஒரு கட்டத்தில் இயக்குனரும் சரி என கூற அந்த காட்சி உருவாக்கப்படாமல் போனது அதேபோல படமும் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஆனால் அந்த லிப் லாக் காட்சிகளை வைத்திருந்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக தான் பார்க்கப்படுகிறது.

Leave a Comment