96, மற்றும் கில்லி படத்தின் ஒற்றுமையை வீடியோவாக வெளியிட்ட நடிகை திரிஷா!! வைரலாகும் வீடியோ.

0

trisha post a video on 96 and killi movie same scenes video:நடிகை திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் 96 மற்றும் கில்லி. இந்த இரண்டு படங்களுமே திரிஷாவுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் இந்த இரண்டு திரைப்படத்திலுமே தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி  இருப்பார்.

த்ரிஷா இந்த 2 திரைப்படத்தின் ஒற்றுமைகளை தனது சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். கில்லி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் பேருந்தில் விமான நிலையத்திற்கு செல்வார்கள். அதுபோலவே 96 படத்தில்  அக்காட்சியில் விஜய் சேதுபதியும் திரிஷாவும் விமான நிலையத்திற்கு காரில் செல்வார்கள்.

மேலும் கில்லி படத்தில் விஜய் திரிஷாவிடம் டிக்கெட் கொடுப்பார் அதுபோலவே 96 படத்தில் விஜய் சேதுபதி திரிஷாவிடம் டிக்கெட் கொடுப்பார். டிக்கெட் கொடுத்தவுடன் 2 படத்து கிளைமாக்சிலும் ஒருவர் முகத்தை ஒருவர் உணர்ச்சிபோங்க பார்த்துக் கொள்வார்கள்.

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பிளைட்டில் திரிஷா கவலையாக தனியாக உட்கார்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியும் இந்த இரண்டு படத்திலும் ஒரே போலவே உள்ளது.

இந்த இரண்டு திரைப்படத்தின் ஒற்றுமையாக இருக்கும் காட்சிகளை வீடியோவாக உருவாக்கி அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.