திரிஷாவின் பரமபதம் விளையாட்டு எப்பொழுது தெரியுமா.!! அதிகாரபூர்வ தகவல் இதோ.

trisha44
trisha44

பொதுவாகவே நடிகைகள் ஐந்து முதல் பத்து வருடங்களுக்குள் ஹீரோயினாக இருந்து பின்னர் துணைக் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நடிகை திரிஷாவோ 19 ஆண்டுகளுக்கும் மேல் ஹீரோயினாக நடித்து வருகிறார் .

மேலும் இவர் தமிழ் தெலுங்கு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், சுந்தர் பாலுவின் இயக்கத்தில் கர்ஜனை எச் வினோத் இயக்கத்தில் சதுரங்க வேட்டை 2, எம் சரவணன் இயக்கத்தில் ராங்கி மற்றும் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சர்க்கரை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது தனது அறுபதாவது திரைப்படமான பரமபதம் விளையாட்டு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் திருஞானம் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா மருத்துவராக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான் ஏ எல் அழகப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரிஷாவின் அறுபதாவது திரைப்படமான இந்த திரைப்படத்திற்க்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.