த்ரிஷா படத்தை தட்டி தூக்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.! எந்த தொலைக்காட்சி தெரியுமா

0

90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை திரிஷா இவர் பல  திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். நடிகை திரிஷாவின் 60 வது படமாக பரமபதம் விளையாட்டு இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் திருஞானம் இயக்கிய இந்த அரசியல் திரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரு அரசியல்வாதி மரணத்தை விசாரிக்கும் டாக்டர் வேடத்தில் திரிஷா அவர்கள் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் விரைவில் விஜய் டிவியில் வெளியிடப்பட உள்ளது. தற்போது விஜய் டிவி இதை முன்னிட்டு தற்போது விளம்பரத்தை வெளியிட்டுள்ளது சுதந்திர தினம் நெருங்கி வருவதால் அந்த தேதியில் திரிஷாவின் பரமபத விளையாட்டு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.

parama batham vilaiyattu
parama batham vilaiyattu

திரிஷா அவர்கள் தற்போது ராங்கி என்ற திரைப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பொண்ணியின் செல்வன் படத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.