லியோ படப்பிடிப்பு தளத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய திரிஷா.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

trisha
trisha

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை திரிஷா. இதனை தொடர்ந்து காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து லியோ திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய மூன்று நாட்களில் நடிகை திரிஷா அவர்கள் சென்னை திரும்பி இருக்கிறார். அப்போது சோசியல் மீடியாக்களில் நடிகை திரிஷாவிற்கும் லோகேஷ் நாகராஜ்க்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சனை அதனால் தான் லியோ திரைப்படத்திலிருந்து த்ரிஷா விலகி விட்டார் என்று கூறி பெரும் வதந்தியை கிளம்பி இருந்தனர்.

ஆனால் திரிஷா அவர்கள் திரும்பவும் காஷ்மீர் லியோ பட பிடிப்பிற்காக சென்று இருக்கிறார் அப்போது விமானத்தில் சென்று கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் ஹோட்டலில் தங்கி இருந்து சாப்பிடுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வதந்தி பரப்பியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடிகை திரிஷா அவர்கள் மறுபடியும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வர முடியும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரும் திரிஷா அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இன்று காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் லியோ படத்தில் பணிபுரியும் பெண்களோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் உடன் நடிகை திரிஷா அவர்கள் இணைந்து உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது அது மட்டுமல்லாமல் இவர்கள் கூட்டணியில் வெளியான கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த மெகா ஹிட் ஜோடி தற்போது லியோ படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து லியோ படபிடிப்பு தளத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வந்த நிலையில் சமீபத்தில் லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் அவர்கள் நடித்த வரும் சில காட்சிகள் லீக்கானது இதனை தொடர்ந்து தற்போது நடிகை திரிஷா அவர்கள் காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

trisha
trisha
trisha
trisha