த்ரிஷா ஒல்லியா இருக்க “அந்த கெட்ட பழக்கம்” காரணமா.? விலாசிய பிரபல பத்திரிகையாளர்

Trisha : தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு  மேலாக நடித்து வருவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் சீரிஸ் படம் நல்ல வரவேற்பு வெற்றி கண்டது. வரலாற்று நாவலை வைத்து மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக திரிஷா.

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதோடு இவரது தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும்படி அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து உள்ளார். லியோ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி youtubeபில் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

லியோ டிரைலரில் த்ரிஷாவை பார்த்த ரசிகர்களும் கில்லி படத்தில் பார்த்தது போல் அப்படியே இளமையாக இருக்கிறார் எனவும் கமெண்ட் அனுப்பி வருகின்றனர்.. நடிகை திரிஷா விஜயை தொடர்ந்து அடுத்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும் ஹீரோயின்னாக நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

ஆனால் அது குறித்து இன்னும் அதிகார பூர்வமாக தகவல் வெளிவரவில்லை.. இந்த நிலையில் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி பிஸியாக நடித்து ஓடிக் கொண்டிருக்கும் நடிகை திரிஷா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய ஒரு செய்தி தற்போது இணையதள பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பேசியது திரிஷாவிற்கு அப்போதிலிருந்தே குடிப்பழக்கம் இருக்கிறது அதனால் தான் அவர் உடல் எடை அதிகரிக்கவில்லை என பேசி இருக்கிறார்.  உடல் எடைக்கும் , குடிப்பழத்துக்கும் என்ன சம்மந்தம் என சிலர் கேட்டு பயில்வான் ரங்கநாதரை கலாய்த்து வருகின்றனர்..

Exit mobile version