பல வருடத்திற்கு முன்பே முன்னணி நடிகை திரிஷாவுடன் சிவகார்த்திகேயன் நடித்துள்ளாராம் இதுவரை பலரும் பார்த்திடாத வீடியோ.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. இவர் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர், அதுமட்டுமல்லாமல் சப்போர்ட் நாயகியாகவும் நடித்து பிரபலமடைந்தவர், பின்பு தமிழ் சினிமாவில் அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

பின்பு சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகிய அரண்மனை-2 பேய் திரைப்படத்தில் கதாநாயகியாக வலம் வந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பெரிய அளவில் வெற்றி பெற்றது, இதனைத் தொடர்ந்து மீண்டும் பேய் படத்தில் நடித்தால் வெற்றி கிடைக்குமென நாயகி திரைப்படத்தில் பேய் வேடத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

பின்புதான் விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்தில் நடித்த த்ரிஷா ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், தற்பொழுது இவர் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் விளம்பரப் படங்களிலும் நடித்து காசு பார்த்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இவர் அப்பொழுது சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் திரிஷா, இதில் ஷாக்கான விஷயம் என்னவென்றால், இந்த விளம்பரத்தில் தற்பொழுது முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திரிஷாவுடன் சிவகார்த்திகேயன் அப்போதே நடித்து விட்டாரா என வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment