தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி.! எழுந்து வா தங்கமே ஹர்பஜன் ட்வீட்.!

0
sujith
sujith

தம்பி நீ வந்தால் தான் எல்லோருக்கும் உண்மையான தீபாவளி என சுஜித் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்பது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியை சேர்ந்த பிரிட்டோ காலமேரி தம்பதியின் இரண்டு வயதுக் குழந்தை சுஜித் வில்சன் என்பவர் அவரது வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்., அப்போது அவரை மீட்கும் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன முதலில் 28 அடி ஆழத்தில் இருந்த குழந்தை மணல் சரிந்து விழுந்ததில் 80 அடி கீழே சென்று விட்டான்.

சுஜித் மீண்டு வர தமிழகமே பிரார்த்தனை செய்து வருகிறது, அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என சுஜித் விரைவில் மீட்க வலியுறுத்தி வருகிறார்கள், சுஜித் மீட்க ரிக் எந்திரம் கொண்டு பக்கத்தில் பள்ளம் தோண்டப்படுகிறது இந்தப்பணி காலை முதல் நடைபெற்று வருகிறது, முதலில் 25 அடி ஆழம் விரைவில் தோண்டப்பட்டது என்பவரை தென்பட்டதால் குழி தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் என ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் சுஜித் மீண்டு வர வேண்டும் என போட்டுள்ளார்கள், அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில் என்னால் சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு ட்வீட் செய்துள்ளார்.