திருச்சி லலிதா ஜூவல்லரியில் ஆட்டையை போட்ட கொள்ளையர்கள்.! வைரலாகும் சிசிடிவி வீடியோ

0
Lalitha-jewellery
Lalitha-jewellery

திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் வாட்ச்மேன் இருக்கும்பொழுதே நூதன முறையில் வைரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளார் இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லலிதா ஜூவல்லரி 100 கிலோவுக்கு மேல் உள்ள தங்க மற்றும் வைர நகைகளை முகமூடி போட்டுக் கொண்டு கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளார்கள். ஆனால் அந்த கடையில் இரவு நேரங்களில் கூட நான்கு வாட்ச்மேன் இருந்துள்ளார்கள். அப்படி இருந்தும் இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது.

ஏசி மிஷன் சுவற்றில் ஓட்டை போட்டுக் கொண்டு இரண்டு பேர் முகமூடி அணிந்துகொண்டு சாவகாசமாக திருடி சென்றுள்ளார்கள். இந்த கொள்ளை பற்றி எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை ஏனென்றால் கொள்ளை அடித்து சென்ற இடங்களில் மிளகாய் போடி வீசியும் மோப்ப நாய்கள் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு திருடி சென்றுள்ளார்கள்.

போலீசார் லலிதா ஜிவல்லரியில் நடந்த கொள்ளை தொடர்பாக 2 சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளார்கள். அதில் கீழ்த்தளத்தில் பெரிய ஓட்டை போட்டு உள்ளே வந்த வெறும் ஸ்குரூ டிரைவரை கொண்டு.. இன்ச் இன்ச்சாக.. அந்த கண்ணாடி அலமாரியை நகர்த்தி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதை கருப்பு பையில் எடுத்து வைக்கும் கொள்ளையர்கள் அப்படியே எஸ்கேப் ஆகிறார்கள். இத்தனைக்கும் வெளியில் தான் வாட்ச் மேன்கள் அமர்ந்து இருந்திருக்கிறார்கள்.

இதோ அதன் சிசிடிவி காட்சி