ஆழ்துளை கிணறில் சிக்கிய சுர்ஜித்.! என்ன ஆனான் எப்படி இருக்கிறான்.! இதோ வெளியான முக்கிய தகவல்.

0
child

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்துள்ளார். முதலில் அந்த குழந்தை 26 அடியில்தான் சிக்கினான் பின்னர் அது 70 அடி ஆழத்திற்கு குழந்தை சுர்ஜித் சென்றான். தற்பொழுது 80 அடிக்கு மேல் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதேபோல் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி இதுவரை நாற்பத்தி ஒரு மணி நேரம் கடந்து விட்டது, குழந்தையை மீட்க  புதிது புதிதாக முயற்சி செய்தாலும் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன, இந்த நிலையில் அந்த ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் மற்றொரு குழிதோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுவரை அந்த சுரங்கமும் 30 அடிக்கு தோண்டி விட்டதாக கூறுகிறார்கள், 30 அடிக்கு மேல் பாறை உள்ளதால்  மிகவும் மெதுவாக ரிக் வண்டி ஓடுகிறது என கூறுகிறார்கள், இந்தநிலையில் சுர்ஜித்தை காப்பாற்ற போராடும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் அங்கு இலேசான மழை வேறு பெய்து வருகிறது.

அந்த ஆழ்துளை கிணறு மாட்டியுள்ள சுர்ஜித் குழந்தையின் கை தலை தெரியும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது, ஆழ்துளைக் கிணறில்  இருக்கும் சுர்ஜித் கையை air லாக் மூலம் பிடிக்கப்பட்டுள்ளது, பலரும் சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்தப் பிஞ்சு இளம் குழந்தையை காப்பாற்ற நாமும் பிரார்த்திப்போம்.