ட்ரெண்டிங்காகும் “தீ தளபதி” – இந்த பாடலுக்காக சிம்பு வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
varisu
varisu

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் அதிரப்புதிரி ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு 66 வது படமாகும்..

வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கல் முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது அதற்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்திழுக்கப் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்த வண்ணமே இருக்கிறது இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர், ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் போன்றவை வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது.

இப்படி இருக்கின்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜயின் வாரிசு படத்தில் இருந்து இரண்டாவது சிங்கள் “தீ தளபதி” பாடல் வெளியாகியது இந்த பாடலை சிம்பு பாடி இருந்தார். இந்த பாடல் தற்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இதுவரை மட்டுமே இரண்டு மில்லியன் பேருக்கு மேல்..

இந்த பாடலை பார்த்து கண்டு களித்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்தப் பாடலை சிம்பு பாடியதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலில் நடித்து  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடலை பாடி, நடித்ததற்காக  சிம்பு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.

முதலில் வாரிசு படத்தில் தீ தளபதி பாடலை 2 மணி நேரத்தில் பாடி முடித்தார் பிறகு நடனமாடும் படி கேட்டுக் கொண்டனர் 2 மணி நேரத்தில் முடித்துவிடலாம் என சொல்லி உள்ளனர் ஆனால் 6 மணி நேரம் ஆனதாம். ஒரு வழியாக அதையும் வெற்றிகரமாக முடித்தார். இதற்காக  நடிகர் சிம்பு ஒத்த ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.