திடீரென காரை பிளந்துகொண்டு வளர்ந்த மரம்.! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.! என்ன காரணம் தெரியுமா.? வைரலாகும் வீடியோ

0

சமீபகாலமாக ஏதாவது ஒரு வினோதம் நடந்தால் அது உடனடியாக சமூக வலைத்தளத்தில் வைரலாக வழக்கம்தான், அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள நண்டஸ் டவுனில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை உடைத்து கொண்டு மரம் ஒன்று வளர்ந்து இருப்பதை கண்டாள் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார்கள்.

மேலும் அதை பார்த்த மக்கள் பலரும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் ஏதாவது ஒரு வினோத நடந்தால் அதைப் பற்றிய கட்டுக்கதைகள் பரப்புவது மக்களின் வழக்கம் அதே போல் இந்த மரத்தை பற்றிய கட்டுக்கதைகளை பரப்பி உள்ளார்கள்.

காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்து இருப்பதை பலரும் இது மேஜிக் எனவும் கூறிவந்தனர் அதன் பின்னர் அந்த மரம் அவ்வாறு வளர்ந்தது எப்படி என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

அந்த மரம் காரை உடைத்து கொண்டு வரவில்லை ராயல் டீலக்ஸ் என்ற தியேட்டரால் செயற்கையாக உருவாக்கப்பட்ட தாம்.