மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்கள்.. அரியவன் பட டிரைலர்

தற்பொழுது இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அரியவன் என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் அந்த படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் திடீரென இளம் பெண்கள் மர்மமான முறையில் விபத்துக்கள் மூலம் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில் அது விபத்து இல்லை கொலைதான் என கண்டுபிடிக்கும் நாயகன் அந்த கொலையை செய்யும் நபர் யார்? என்பதையும் கண்டுபிடித்து பிறகு எதற்காக அவர் இப்படி கொலை செய்கிறார் என அனைத்தையும் ஆராய்வதே இந்த படத்தின் கதை.

ஆக்சன் திரில்லர் காட்சிகளுடன் உருவாகி உள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற குடும்பம் ரொமான்டிக் படங்களை இயக்கி வந்த மித்ரன் ஜவஹர் தற்பொழுது முற்றிலும் வேறுபட்ட கதைய அம்சத்துடன் திரில்லர் படமாக அரியவன் படத்தினை உருவாக்கியுள்ளார்.

இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் மூன்றாம் தேதி அன்று வெளியாக இருப்பதாக ட்ரைலரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து ஈஷான் கதாநாயகராகவும், இவருக்கு ஜோடியாக பிராணலி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி, ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனை அடுத்து மாறி செல்வன் கதை எழுத, எடிட்டிங் பணியை தியாகராஜா மேற்கொண்டு இருக்கும் நிலையில் ஒளிப்பதிவை கே.எஸ் விஷ்ணு ஸ்ரீ மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை எம் ஜி பி மாஸ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Comment

Exit mobile version