சிக்னலில் நிற்காமல் போன நபர்.! டிராபிக் போலீஸ் சட்டையை அடித்து கிழித்த பரோட்டா மாஸ்டர்

0

திருப்பூரில் போதையில் டிராபிக் போலீசார் தாக்கியதாக பரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, சமீபகாலமாக டிராபிக் போலீஸ் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஹெல்மெட் போடாதவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், இருசக்கர பின் அமர்ந்துள்ளவர்கள் helmet போடாதவர்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி பிடித்து வருகிறார்கள், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் 20 லட்சம் வரை மக்கள் அபதாரம் கட்டியுள்ளார்கள் இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதுமட்டுமில்லாமல் 20 ஆயிரம் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள்.சென்னை மட்டுமல்லாமல் இன்னும் பல நகரங்களில் அதிரடியாக சோதனை செய்து வருகிறார்கள் டிராபிக் போலீஸ்.

இந்த நிலையில் திருப்பூரில் பரோட்டா மாஸ்டர் ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிக் கொண்டு வரும் பொழுது சிக்னலில் நினைக்காமல் முன் நின்ற வாகனத்தின் மீது மோதி உள்ளார்.இதைப்பார்த்த டிராபிக் போலீஸ் அவரை கையும் களவுமாக பிடித்து உள்ளார் இவர் திருச்சியை சேர்ந்தவர் என்பவரும் பரோட்டா கடையில் பரோட்டா போடும் மாஸ்டர் என தெரியவந்துள்ளது, மேலும் விசாரிக்க அழைத்த டிராபிக் போலீஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனால் அந்த பரோட்டா மாஸ்டர் ஆத்திரமடைந்து போலீஸ்காரரை அடித்து சீருடையை கிழித்துள்ளார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போக்குவரத்து போலீஸ் அங்கு வந்து அந்த பரோட்டா மாஸ்டரை கைது செய்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.