சிம்பு, த்ரிஷா திருமணம் குறித்து பதிலளித்த டி ஆர் ராஜேந்தர்!! வைரலாகும் வீடியோ.

0

tr rajendran interview about simbu, trisha marriage video: திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிக்க செய்தியாளர்களை இன்று டிஆர் ராஜேந்தர் சந்தித்தார். செய்தியாளருக்கு இவர் பேட்டி அளிக்கும் போது நிருபர்கள் சிம்புவுக்கும் திரிஷாவுக்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது அது குறித்து உங்கள் பதில் என்ன என கேட்டனர்.

அதற்கு டிஆர் அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் அடுத்த கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்தார். சிம்புவின் திருமணம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.. மேலும் இந்த வருட இறுதிக்குள் திருமணம் கண்டிப்பாக நடக்கும் எனவும் பொருத்தமான பெண்ணை தேடி வருவதாகவும் கூறினர்.

நடிகர் சிம்பு தற்போது சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நிறைய படங்களில் நடிக்க கமிட்டாகி கொண்டிருக்கிறார். இதுவே அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தற்போது கோவில் கோவிலாக சிம்பு செல்லும் புகைப்படம்  இணையதளத்தில் வெளியானது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விரைவில் நல்ல மணப்பெண் கிடைக்கும் என பதிவிட்டு வந்தனர். அதனைதொடர்ந்து தற்போது சிம்பு த்ரிஷா திருமணம் பற்றி வதந்தி ஒன்று வெளியாகியுள்ளது அதுகுறித்து டிஆர் ராஜேந்தர் செய்தியாளருக்கு அளித்த பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.