தமிழ் சினிமாவில் பல முன்னணி ஜாம்பவான்களை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம் தற்பொழுதும் சினிமா காலத்திற்கு ஏற்றவாறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் இன்னும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
தற்போது இவர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பல நட்சத்திர பட்டாளங்களை வைத்து பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற 2022ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இத்திரைப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது மொத்தம் சேர்த்து இந்தப்படத்தில் 12 பாடல்கள் அமைந்துள்ளதாம்.
இதில் இளங்கோ கிருஷ்ணன் – 8 பாடல்கள், கபிலன் – 2 பாடல்கள், கபிலன், வைரமுத்து – ஒரு பாடல், வெண்பா கீதாயன் – ஒரு பாடல் என மொத்தம் சேர்த்து 12 பாடல்கள். இந்த படத்தில் எழுதி உள்ளனராம். இச்செய்தி தற்போது சமூக வலைதள பக்கத்தில் காட்டுத்தீ போல பரப்பி வருகின்றனர்.