உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த டாப் நட்சத்திரங்கள்.? ஹீரோயின் யார் தெரியுமா.?

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சினிமாவைப் கைப்பற்ற முடியும் அந்த வகையில்  உதயநிதி ஸ்டாலின்னும் ஒருவர் ஆரம்பத்தில் காமெடி, காதல் கலந்த படங்களில் நடித்து மக்கள் மனதில் தனது பெயரை நிலை நாட்டினார் அதை தொடர்ந்து தற்போது வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

எந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அதற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடித்து அசத்துவார் உதயநிதி ஸ்டாலின். கடைசியாக கூட கண்ணேகலைமானே, சைக்கோ ஆகிய படங்களில் இவரது நடிப்பு வித்தியாசமாக இருந்தது. மேலும் அந்த  படமும் நல்லதொரு வெற்றியை ருசித்தது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹிந்தியில் பிரமாண்ட வெற்றியை பெற்ற ஆர்டிகள் 15 படத்தை தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார் இந்த படத்தை அருண் காமராஜ் இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் உதயநிதி  ஸ்டாலின் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட மாரி செல்வராஜ் உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்து பகத் பாசில், வடிவேலு, ஏ ஆர் ரகுமான் மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இருக்கிறதாம்.

இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது. இதை அறிந்த உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நிச்சயம் இந்த திரைப்படம் மிக பிரம்மாண்ட ஒரு வெற்றிபடமாக மாற வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Leave a Comment