8 வருடம் கழித்து விஜயுடன் மோத ரெடியான டாப் ஹீரோ – அடுத்த பொங்கல் திருவிழா தான்.!

சினிமா உலகம் புதியதை நோக்கி ஓட ஓட பல்வேறு விஷயங்கள் மாற்றிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் மோதுவதால் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து வருவது வழக்கம் ஆனால் அண்மைகாலமாக டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் சோலோவாக வெளியாகி வசூல் வேட்டை நடத்துகின்றன.

இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பட குழுவினர் சந்தோஷமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு சற்று கவலையை கொடுக்கிறது இரண்டு ஹீரோக்கள் ஒரே சமயத்தில் மோதும் போது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம் அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இரண்டு ஹீரோக்கள் ஒரே சமயத்தில் மோதுகின்றனர்.

அந்த வகையில் வருகிற தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன மேலும் சிவகார்த்திகேயனும் இந்த லிஸ்டில் இணைகிறார். இப்படி இருக்க அடுத்த வருட பொங்கலுக்கு அஜித் விஜய் படங்கள் நேருக்கு நேர் மோத இருக்கின்றன அஜித்தின் ஏகே 61 திரைப்படம்.

தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்தாலும் தற்போது தெலுங்கில் அக்னிபாத் திட்டம் பூதாகரமாக வெடித்து போராட்டம் நடந்து வருகிறது இதனால் அஜித்தின் ஏகே 61 படத்தின் ஷூட்டிங் தடை பட்டு உள்ளது இந்த பிரச்சினை முடிந்த பிறகு ஆகஸ்ட் மாதம் ஏகே 61 படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது அப்படி என்றால் அஜித்தின் 61வது திரைப்படம் தீபாவளிக்கு வருவது சந்தேகம்.

இதனால் படகுழு அடுத்ததாக அடுத்த வருட பொங்கலை டார்கெட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த சமயத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கிறது இதனால் எட்டு வருடங்கள் கழித்து அஜித் விஜய் படங்கள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version