டாப் ஹீரோ பட்டியலில் 5 இடத்தை தட்டி தூக்கிய கவின்.! இது என்னடா முன்னணி நடிகர்களுக்கு வந்த சோதனை.!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின், இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கலந்து கொண்டார் இதில் 17 போட்டியாளர்களில் ஒருவராக இவரும் கலந்து கொண்டார், இவர் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதை நாம் பார்த்திருந்தாலும். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சில்மிஷங்கள் மூலம் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது.

கவின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னாடி நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல பிரபலங்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

கவின் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்து வருகிறார், இவர் இதற்கு முன் பிகில் திரைப்படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த லிப்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் டைட்டில் வைத்து கவின் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.

கவின் லிப்ட் திரைப்படத்தை 1.15 மில்லியன் டிவீட்களை பெற்றுள்ளது. இதனால் அதிகம் டுவிட் செய்யப்பட்ட தமிழ் படங்களின் டைட்டிலில் கவின் திரைப்படத்தின் டைட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது, இதோ முழு லிஸ்ட்.

வலிமை – 3.1 மில்லியன், மாஸ்டர் – 2.9 மில்லியன், பிகில் – 2.2 மில்லியன், சர்கார் – 1.2 மில்லியன், லிப்ட் – 1.15 மில்லியன், சூரரை போற்று – 1 மில்லியன்

Leave a Comment