முன்னணி ஹீரோன்னா இப்படித்தான் இருக்கணும் அஜித்தை பார்த்து கத்துக்கோங்க.! ஷாக்கான மற்ற நடிகர்கள்..

ajith-
ajith-

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறி உள்ளதால் அஜித்தின் அடுத்த அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இதேபோலவே தான் சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் கூட பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர் காரணமும் நல்ல நடிகர் சினிமாவையும் தாண்டி நல்ல மனிதர் என்ற பெயரை அவர் வைத்திருப்பதால் அவரை நேரிலோ அல்லது படங்களிலோ பார்க்க துடிக்கின்றனர் ஒரு நடிகை, நடிகர்கள் சிலர் அஜித்துடன் நடித்தால் போதும் எனக்கு சம்பளம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என கூறும் அளவிற்கு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

அஜித்தைப் போலவே ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் நடிப்பதால் சம்பளம் எல்லாம் வேண்டாம் தனது மார்க்கெட் உயரும் என்ற எண்ணத்தில்  இருக்கின்றனர் இதை சரியாக பயன்படுத்தி தயாரிப்பாளரும் அவர்களுக்கு சம்பளத்தை கொடுப்பதை தவிர்க்கின்றனர் ஆனால் அண்மைகாலமாக அஜித் தனது ரூட்டை மாறிப் போயுள்ளது அதாவது தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொடங்கி டெக்னீசியன் என அனைவருக்கும் சம்பளத்தை கொடுக்கும் கொள்கையை பின்பற்றி வருகிறார்.

‘அஜித் ஒரு திரைப்படத்தில் நடித்துக் இருந்தால் தனக்கு மட்டும் சம்பளம் வாங்காமல் மற்றவர்களுக்கும் சம்பளத்தை கொடுக்க அதிக முனைப்பு காட்டுவார் முதலில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தனது மேனேஜரை வைத்து அனைத்து ஊழியர் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாக முதலில் தெரிந்து கொள்வார் கொடுத்திருந்தால் விட்டுவிடுவார் அப்படி இல்லை என்றால் தயாரிப்பாளருக்கு போன் செய்து அழகாக பேசி சம்பளம் கொடுக்குமாறு கேட்பார்.

பெரிய நடிகர் இவ்வாறு சொல்வதால் வேறு வழி இல்லாமல் அனைத்து  டெக்னீஷியன்கள் மற்றும்  முன்னணி நடிகர் தொடங்கி குணச்சித்திர நடிகை என அனைவருக்கும் சம்பளத்தை கொடுத்து விடுவார்களாம் இதற்கான காரணமும் இருக்கு.. அது ஒரு மிகப் பெரிய நடிகர் சொல்வதை..

அந்த தயாரிப்பாளர் கேட்கவில்லை  என்றால் அவருக்கு அடுத்த  பட கால்ஷீட்டை தர மறுப்பார் என்ற பயத்தில் இவர்கள் பெரிய நடிகர்கள் சொல்வதை கேட்கின்றனர். இந்த பாணியை பின்பற்றுவதால் அஜித் படத்தில் நடிக்க தற்போது டெக்னீசியன்கள் நடிகர், நடிகைகளும் ரொம்ப ஆர்வம் காட்டுகிறார்களாம் இது சினிமா உலகில் ஒரு நல்ல விஷயம் கூட என பலரும் கூறுகின்றனர்.