காத்ரீனா கைஃப் கல்யாணத்துக்கு விலையுர்ந்த பரிசுகளை அள்ளி கொடுத்த டாப் நடிகர்கள்.! கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்.

0
katrina-kaif
katrina-kaif

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையான கத்ரீனா கைஃப் தொடர்ந்து தனது திறமையையும், கிளாமரையும் காட்டி  பெரிதும் அளவு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்தவர். சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு படங்களில் ஒரு நடிகர் நடிகைகள் இணைந்து விட அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என பேசுவது சகஜம்.

ஒரு சில நடிகர் நடிகைகள் சினிமாவையும் தாண்டி  பழகினாலே போதும் அது காதல் என கூறுவார்கள். இப்படி பல்வேறு விஷயங்களில் சிக்கி தவித்தார் நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் எப்போது திருமணம் செய்தார்கள் என கேட்டு ஒரு பக்கமும் குடைச்சல் கொடுத்து வந்தனர்.

அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி காத்ரீனா கைஃப் விக்கி கௌஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கல்யாணம் ராஜஸ்தானில் மிக பிரம்மாண்ட முறையில் அரங்கேறி முடிந்தது. இந்த கல்யாணத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல். வாழ்த்தி அவர்களுக்கு பரிசுப் பொருளையும் கொடுத்து அசத்தி உள்ளனர்.

அந்த வகையில் கத்ரீனா கைஃப் என் முன்னாள் காதலர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல..சல்மான்கான், ரன்பீர் கபூர் ஆகியவர்கள் இவரது முன்னாள் காதலர்களாக இருந்ததாக கூறப்படுகிறது அவர்கள் இருவரும் இந்த கல்யாணத்துக்கு வந்து அதிக தொகையில் பரிசுகளை கொடுத்து அசத்தி உள்ளனராம்.

சல்மான்கான் 3 கோடி மதிப்பில் உள்ள ரேஞ்ச் ரோவர் கார் பரிசளித்தார்.அதேபோல ரன்பீர் கபூர் இரண்டு கோடிக்கும் மேலான மதிப்புள்ள வைர நெக்லஸை கொடுத்து அசத்தினார். இவர்களைத் தொடர்ந்து ரித்திக் ரோஷன், ஷாருக்கான், ஆலியா பட் போன்றவர்களும் லட்சக்கணக்கான அளவில் உள்ள பொருட்களை கொடுத்து அசத்தினார்.