லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் அப்டேட்டை கேட்டு அலறும் டாப் நடிகர்கள்.! ரஜினி, விஜய் படம் கூட இத செய்யல..

சரவணா ஸ்டோர் என்றால் மக்கள் அனைவருக்கும் தெரியும் அந்த கடையின் ஓனர் சரவணன் அவர்கள் விளம்பர படங்களில் தலைகாட்டி வந்த அவர் புதிதாக படமொன்றில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை என்றாலும் மிகப்பெரிய பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்பவர்கள் இயக்குகின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு உல்லாசம், விசில் போன்ற சூப்பர் படங்களை இயக்கி உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சரவணன் அவர்களுடன் இணைந்து யோகி பாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, பிரபு மற்றும் மறைந்த நடிகர் விவேக் அவர்களும் நடித்துள்ளனர்.

லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இதுவரை இரண்டு படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஊர்வசி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடைசியாக நடந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டது படக்குழுவுக்கு நன்றி என கூறி தனது சூப்பரான புகைப்படங்களை பதிவிட்டு கூறி இருந்தார் நடிகை ஊர்வஷி ரவுத்தேலா.

மேலும் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பதையும்  குறிப்பிட்டு இருந்தார்.  டாப் ஹீரோக்கள் படங்கள் கூட ஓரிரு மொழிகளில் வெளியாகும் நிலையில் சூப்பர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் முதல் படமே அதற்குள்ளேயே ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்பது பலருக்கும் தற்போது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment