சம்பள விசயத்தில் டாப் நடிகர்களை முந்திய “வெற்றி மாறன்”.? யாரும் எதிர் பார்க்காத நேரத்தில்.. இவ்வளவு கோடி ஏத்திட்டாரு.?

சினிமாவுலகில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னணி நடிகராக மாற்றிக் கொண்டு வரும் டாப் நடிகர்கள் பலரும் படங்களைத் தொடர்ந்து கைப்பற்றி நடிப்பதோடு அந்த படங்களுக்காக சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி கொண்டு நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர் சம்பளமாக வாங்குகின்றனர் அதைத் தொடர்ந்து அஜித் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குகிறார் அதன்பிறகு சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன் போன்றோர் 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.

இப்படி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை பலரும் சம்பளத்தை உயர்த்திக் கொண்டு நடிக்கின்றனர். சினிமா உலகம் பணம் இருக்கும் இடம் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான் தற்பொழுது நடிகர்களையும் தாண்டி தற்போது இயக்குனர்களும் மிகப்பெரிய தொகையை ஒரு படத்திற்காக கேட்கின்றனர்.

அந்த வகையில் ஷங்கர், அட்லீ, முருகதாஸ் போன்றோர் ஒரு படத்திற்காக அதிக தொகை வாங்குவதில் முதன்மையானவராக இருக்கின்றனர் அந்த லிஸ்டில் தற்போது தமிழ் சினிமாவில் தொடர் ஹிட் படங்களை எடுத்த இயக்குனர் வெற்றிமாறனும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார் தற்போது ஒரு திரைப்படத்திற்காக 23 கோடி சம்பளம் வாங்குகிறார்.

திரை உலகில் சைலண்டாக இருந்துகொண்டு பல வெற்றிப் படங்களைக் கொடுக்கும் வெற்றிமாறனா இப்படி அதிகமாக சம்பளத்தை உயர்த்திக் கொண்டுள்ளது அது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ஏ. ஆர். முருகதாசை ஓரம்கட்டி அவரை விட அதிகமாக சம்பளம் வாங்குவராக இருக்கிறார்.

வெற்றிமாறன் மேலும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக இருக்கும் தனுஷுடன் இவர் இணைந்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷை விட அதிகமாக சம்பளம் வாங்கும் விஷயத்தில் முன்னேறி இருக்கிறார் தனுஷ் ஒரு படத்திற்காக சுமார் 18 கோடி சம்பளம் வாங்குகிறார் அவரை விட இவர் 5 கோடி அதிக வாங்குகிறார்.

வெற்றிமாறன், சூர்யாவுடன் இணைந்து இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கு  23 கோடி சம்பளம் வாங்க பேசி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment