வெற்றிமாறனின் பிளாக்பஸ்டர் படத்தை மிஸ் செய்த டாப் நடிகர்.. ஆனா இந்த தடவ மிஸ் ஆகாது.. அடுத்த லெவலுக்கு செல்ல புதிய ரூட் போட்ட நடிகர்.

சினிமாவில் ஜாதி கொடுமைகளையும், சமூக அக்கரை உள்ள கருத்துகளை எடுத்துக்கூறி படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும் இயக்குனர்கள் வெகுசிலரே அதில் பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அசுரன் திரைப்படம் அது போன்ற ஒரு திரைப்படமாக இருந்தாலும் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து அவர் சூரி, விஜய் சேதுபதியை வைத்து “விடுதலை” என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.இந்தப் படத்தில் முதல் முறையாக வெற்றிமாறன் உடன் விஜய் சேதுபதி இணைந்து உள்ளதால் படத்திற்கான இவர் பார்ப்போம் வேற குரலில் எதிரி உள்ளது.

விஜய்சேதுபதி இதற்கு முன்பாக வெற்றிமாறனுடன் “வடசென்னை” திரைப்படத்தில் இணைய வேண்டியது தான் ஆனால் வேறு ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி கமிட்டாகி இருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதுவும் அந்த திரைப்படத்தில் முக்கிய ரோலான “ராஜன்” கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார் ஆனால் அதை மிஸ் செய்து விடுமோ என குழம்பி இருந்த நிலையில் தற்போது விடுதலை திரைப்படத்தில் நல்ல ரோல் கிடைத்து உள்ளது.

விடுதலை படத்தில் அது போன்ற ஒரு அட்டகாசமான ஒரு ரோலில் நடிக்க உள்ளாராம் விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் விட்டதை இந்த படத்தின் மூலம் கைப்பற்ற ரெடியாக இருக்கிறார். இந்த திரைப்படம் அவருக்கு மேலும் பல பட வாய்ப்புகளை பெற்றுத் தருவதோடு சம்பளத்தை உயர்த்த இந்த திரைப்படம் முக்கிய பங்கு வகிக்கும் என கோலிவுட் வாசிகள் தற்போது கூற ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment