2023-ல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த டாப் 5 பாடல்கள்.! மாதங்கள் கடந்தும் குறையாத வைப்

Tamil Best songs: இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அப்படி வெற்றி பெற்ற படங்களில் ரசிகர்களை பாடல்கள் மூலம் குத்தாட்டம் போட வைத்த ஐந்து பாடல்கள் குறித்து பார்க்கலாம்.

5. ரஞ்சிதமே: விஜய் என்றாலே அந்தப் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது வழக்கம் அப்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த ரஞ்சிதமே பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இப்பாடலுக்கு நடனம் ஆடினர்.

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.! ஆன்ட்டி ஆனதால் இப்படி ஒரு முடிவா?

4. ஸீனா ஸீனா: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் ஸீனா ஸீனா பாடல் ரசிகர்களை கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் இணைந்து நடனமாடிய வண்ணாரப்பேட்டையில் பாடலும் சூப்பர் ஹிட் பிரபலமானது.

3. மாமதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியான இதில் மாமதுரை அன்னக்கிளி பாடல் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க சந்தோஷ் நாராயண இசையமைப்பில் ராகவா லாரன்ஸ் மரண குத்து குத்தி இருந்தார். இந்த பாடலை தீ பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது .

‘தளபதி 68’ பட வாய்ப்பை தட்டி தூக்கிய பிக் பாஸ் பிரபலம்.! 18 வருடங்களுக்குப் பிறகு விஜய் உடன் சேரும் கூட்டணி..

2. நான் ரெடி தான்: விஜய் நடிப்பில் அனிருத் இசை அமைப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நான் ரெடி தான் பாடலும் ரசிகர்களை பெருதளவிலும் கவர்ந்தது. மேலும் லியோ படத்தில் இடம்பெற்ற கரு கரு கருப்பாயி பாடலும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

1.காவாலா: ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம் பெற்றிருந்த காவாலா பாடலுக்கு தமன்னா மரண குத்து குத்தினார். இப்பாடலை அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் பட்டித்தொட்டி எங்கும் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது.

Exit mobile version