2023 -ல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டாப் 5 நடிகைகள் இவர்கள் தான்… அட இவர் சூரியின் காதலியாச்சே

Tamil Actress: 2023ஆம் ஆண்டில் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை திரையரங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை கண்டது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் புதிதாக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்கள் அப்படி 2023ஆம் ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டாப் 5 நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

அபர்ணா தாஸ்: கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் டாடா.  குறைவான பட்ஜெட்டில் உருவான படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அபர்ணா 5வது இடத்தை பிடித்துள்ளார்.

அமிர்தாவும், நிலாவும் என் கூட தான் இருப்பாங்க உன்னால முடிந்த பாத்துக்கோ.. கணேஷிடம் நேருக்கு நேராக சவால் விடும் எழில் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

பவானி ஶ்ரீ: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க ஹீரோவாக சூரி நடித்திருந்த விடுதலைப் படத்தில் ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் நடிகையும் ஜிவி பிரகாஷின் சகோதரியுமான பவானி ஸ்ரீ 4வது இடத்தில் உள்ளார்.

கீர்த்தி சுரேஷ்: வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது மேலும் சாணி காகிதம் படத்திலும் இவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்த நிலையில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக 3வது இடத்தை பிடித்துள்ளார்.

தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் விஜய்க்கு அண்ணியாக என்னால் நடிக்க முடியாது.! தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகை..

திரிஷா: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை தொடர்ந்து கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து கடந்த ஆண்டு மாஸ் காமித்தார்.

நயன்தாரா: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி 1000ம் கோடி வசூல் செய்த ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நயன்தாரா ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து இந்த ஆண்டின் லேடி சூப்பர் ஸ்டாராக முதலிடத்தில் உள்ளார்.