2023ல் மாஸ் காட்ட இருக்கும் டாப் 5 திரைப்படங்கள். இதுல உங்க ஃபேவரட் எது.?

varisu-ponniyin-selvan-thunivu
varisu-ponniyin-selvan-thunivu

கடந்த 2022 பல நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. 2022 இல் வெளிவந்த வலிமை, பீஸ்ட், பொன்னியின் செல்வன் 1, விக்ரம், லவ் டுடே போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை அள்ளியது அதைப்போல இந்தாண்டும் பல டாப் நடிகர்களின் படங்கள் வெளிவர உள்ளது. அப்படி இந்தாண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் டாப் 5 படங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

1. ஜெயிலர் : இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை அதேபோல நெல்சனின் பீஸ்ட் படமும் எதிர்பார்த்த அளவு இல்லை இதனால் ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் இந்த ஜெயிலர் படம் இருவருக்குமே ஒரு சிறந்த படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. துணிவு : ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் துணிவு வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதில் அஜித் செம மாஸ் ஆக நடித்துள்ளார் அதனால் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை காண ஆவலுடன் இருக்கின்றனர். 3 : வாரிசு : விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தில்ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் செம மாஸாக வெளியாக உள்ளது அதனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

4: பொன்னியின் செல்வன் 2  : மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகளின் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலை ஈட்டியதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

5. இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டு பாதியிலே கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து தளபதி 67 மற்றும் சூர்யாவின் 42வது படம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமையும்.