2022-ல் தமிழகத்தில் வசூலில் முதல் ஐந்து இடத்தை பிடித்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

cinema news
cinema news

பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் ரஜினி விஜய் அஜித் படங்கள் மூலம் மிகப்பெரிய வசூல் கிடைத்து வருகிறது அதேபோல் அவர்களின் திரைப்படங்களின் வசூல் சாதனையை ஒருவருக்கொருவர் முறியடிப்பார்கள்.

அந்த வகையில் தமிழ் திரைப்படங்கள் தான் தமிழ்நாட்டில் அதிக வசூலை பெறும் ஆனால் சமீபகாலமாக தெலுங்கு சினிமா மூலம் வெளியாகும் திரைப்படங்களும் கன்னட சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களும் டப் செய்யப்பட்டு அதிக அளவு வசூலை ஈட்டியுள்ளது அந்த வகையில் பாகுபலி திரைப்படம் தமிழ் திரைப்படங்களின் லிஸ்டில் இடம் பிடித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சமீபத்தில் வெளியாகிய KGF இரண்டாவது பாகமும் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றுள்ளது இதுவரை வெளியாகிய மொத்த படங்களின் பாக்ஸ் ஆபீஸ்  நிலவரத்தை பார்த்தால் பாகுபலி திரைப்படமும் இடம்பெறும்.

ஆனால் 2022 இந்த வருடத்தில் இந்த நான்கு மாதத்தில் மட்டும் வெளியாகிய திரைப்படங்களின் டாப் 5 இடத்தில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில் விவரங்களை இங்கே காணலாம்.

அந்த வகையில் முதலிடத்தில் அஜித்தின் வலிமை திரைப்படம் பிடித்துள்ளது அதேபோல் இரண்டாவது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் மூன்றாவது இடத்தில் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படமும் நான்காவது இடத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகிய கேஜிஎஃப் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐந்தாவது இடத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன்  திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

மேலும் இன்னும் ஆர் ஆர் ஆர் மற்றும் கேஜிஎப் இரண்டாவது பாகம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதால் இறுதி வசூலை பார்த்தால் இந்த லிஸ்ட் அப்படியே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.