ஒரு வருடத்தில் மட்டும் அதிக திரைப்படங்களில் நடித்த 5 டாப் ஹீரோக்கள்.? ரஜினி, கமல், விஜயகாந்தையே தூக்கி சாப்பிட்ட நடிகர்.!

தமிழ் சினிமா உலகில் இப்பொழுதெல்லாம் முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை கொடுத்தால் போதும் என இருக்கிறார்கள் ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் அந்த அளவிற்கு இவர்கள் உழைத்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஐந்து நடிகர்கள் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 10 படங்களுக்கு மேல் எல்லாம் நடித்து இருக்கின்றனர் அவர்கள் யார் யார் என்பதை விலாவரியாக தற்போது பார்க்கலாம்.

  1. மோகன் :

தமிழ் சினிமாவுலகில் காதல், சென்டிமெண்ட் படங்களில் மட்டுமே நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டவர். இவரது திரைப்படங்கள் எப்பொழுதுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் அந்த காரணத்தினால் அப்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்தார் இவருக்கு 1984 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக இருந்தது.

அந்த அளவிற்கு அந்த ஒரு வருடத்தில் மட்டுமே சுமார் 15 படங்களில் நடித்து அசத்தியுள்ளார். நூறாவது நாள், 24 மணி நேரம், வீதி, ஓசை, உன்னை நான் சந்திக்கிறேன் போன்ற  பல படங்களில் நடித்து உள்ளார்.

2. கமலஹாசன் :

நடிப்பிற்கு பெயர்போன கமலஹாசன் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் அந்த வகையில் 1978ஆம் ஆண்டு அவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது அந்த ஆண்டு மட்டும் சுமார் 19 திரைப்படங்களில் நடித்துள்ளார். சட்டம் என் கையில், இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், சிவப்பு ரோஜாக்கள், நிழல் நிஜமாகிறது போன்ற படங்களாகும்.

3. விஜயகாந்த் :

தமிழ் சினிமாவுலகில் கிராமத்து கதை உள்ள படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியை ருசித்த அவர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1984ஆம் ஆண்டு மட்டுமே சுமார் 19 படங்களில் நடித்துள்ளார் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், நல்ல நாள், வெற்றி, வேங்கை மனிதன் போன்ற பல படங்களில் நடித்தார்.

4. ரஜினி :

சினிமாவில் இப்போது நம்பர்-1 ஹீரோவாக வலம் வரும் ரஜினி. கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பின் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை ருசித்தன அதிலும் குறிப்பாக 1978ஆம் ஆண்டில் மட்டும் 21 படங்களில் நடித்தார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக மாறியது. பிரியா, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், இளமை ஊஞ்சலாடுகிறது, பைரவி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.

5. சத்யராஜ் :

தமிழ்சினிமாவில் இப்பொழுது டாப்  ஹீரோ படங்களில் அப்பா, சித்தப்பா, தாத்தா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சத்யராஜ். 1978ஆம் ஆண்டு மட்டும் சுமார் 25 திரைப்படங்களில் நடித்தவர் அந்த ஆண்டு அவருக்கு பொற்காலம் என்று சொல்லலாம் என அந்த அளவிற்கு பல படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வெற்றி மேல் வெற்றி கண்டார். நான் சிகப்பு மனிதன், முதல் மரியாதை, பகல் நிலவு, பிள்ளை நிலா, சாவி போன்ற பல படங்களில் நடித்தார்.

 

Leave a Comment