TRP ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த சீரியல்கள் – பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி தொடரையே முந்திய புதிய சீரியல்.!

தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களின் படங்களை பிரமாண்ட பட்ஜெட்டில் சிறப்பாக எடுத்து அதனை திரையரங்கில் வெளியிடுகின்றனர் அந்தப் படங்களைக் காண ரசிகர்கள் கூட்டம் ஒருபக்கம் இருந்தாலும் டிவி சேனல்களில் தினம்தினம் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளன.

அப்படி சின்னத்திரையில் விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற பல டிவி சேனல்கள் பகலில் தொடங்கி இரவு வரை பல சீரியல்களை கொடுத்து அசத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடர்களிலும் மக்கள் அனைவருக்கும் பிடித்து சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் டிஆர்பி ரேட்டிங் உள்ளன.

அப்படி டிஆர்பி ரேட்டிங்கில் அதிகம் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் இடம் கிடைக்கும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் வெளியாகும். அதில் அதிகம் முதல் இடத்தைப் பிடிப்பது விஜய் டிவி சீரியல்கள் தான். அந்த வகையில் தற்போது சென்ற வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது.

அதில் முதலிடத்தில் சன் டிவியில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியல் ஒளிபரப்பான கொஞ்ச நாட்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2வது இடத்தில் விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடர் இடம்பிடித்துள்ளது.

மேலும் மூன்றாவது இடத்தில் சன் டிவி சுந்தரி சீரியல் மற்றும் 4, 5வது இடத்தை விஜய் டிவி சீரியல் நிரப்பி உள்ளது. அதன்படி நான்காவது இடத்தில் பாரதிகண்ணம்மா தொடரும் ஐந்தாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இடம்பிடித்துள்ளன.

Leave a Comment