கவர்ச்சியை காட்டாததால் சினிமா பட வாய்ப்பை இழந்த டாப் 5 நடிகைகள்.! லிஸ்ட் இதோ.

சினிமா உலகை பொறுத்தவரை என்னதான் நீங்கள் திறமையை பெரிதாக காட்டினாலும் அதேசமயம் சில சீன்களில் நீங்கள் கிளாமர் காட்டி நடிக்க வேண்டிய சூழல் வந்து தான் போகும் அதை தவிர்க்கும் பிரபலங்கள் ஒரு கட்டடத்தில் மேல் பட வாய்ப்பை கைப்பற்ற முடியாமல் போயுள்ளது அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது திறமையை காட்டி முன்னணி நட்சத்திரங்களாக இருந்தாலும் கிளாமர் காட்டாமல் போனதால் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் சுற்றித் திரிகின்றனர் அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்ப்போம்.

1. ஸ்ரீதிவ்யா :

இளம் நடிகையான ஸ்ரீதிவ்யா ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து கிராமத்து கதை உள்ள படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார் அந்தப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அந்த வகையில் முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த அதனைத் தொடர்ந்து காக்கிசட்டை, மருது, ஈட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று இருந்தாலும் அதன்பின் தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது. இவர் படங்களில் பெரிதும் கவர்ச்சி காட்டாமல் போனதே அவருக்கு பாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

2. சுவலட்சுமி : இவர் அஜித்துடன் இணைந்து “ஆசை” என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படம் இவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் அதன் பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த பெரும்பாலான படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தது மேலும் படங்களில் பெருமளவு கவர்ச்சி காட்டாமல் வந்த நடிகைகளில் ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. நதியா :

80 காலகட்டங்களிலிருந்து இப்போது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகை நதியா. இவர் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் கிளாமர் காட்சிகளில் துளிகூட நடித்தது கிடையாது அதே சமயம் படங்களில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற விஷயங்களில் இருந்தாலும் அதைத் தவிர்த்துவிடுவது இவரது ஸ்டைல். அதனாலேயே இப்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார் நடிகை நதியா.

4.  இளவரசி :

விசு நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’ இந்த படத்தில் இளவரசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் அதன் பின் குடும்ப கதாபாத்திரம் உள்ள கதைகளில் பெரிதும் நடித்தாலும் கிளாமர் காட்டாமல் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 சங்கீதா :

குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து தனது திறமையைக் காட்டியவர் சங்கீதா இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில்  50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவரும் அதிகம் கவர்ச்சி காட்டாத நடிகைகளில் ஒருவராக சினிமா உலகில் வலம் வந்தவர்.

Leave a Comment