டாப் 20-ல் முதலிடம் பிடித்த விஜய்.! இதோ லிஸ்ட் அதிகாரபூர்வ அறிவிப்பு

0

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருப்பவர் இவர் தற்போது அட்லி இயக்கத்தில் 3வது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு, பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் விஜய் கால்பந்து கோச்சராக நடித்துள்ளார், மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகிபாபு, ஜாக்கி ஷராப், விவேக்,ஆனந்த் ராஜ்,டேனியல் பாலாஜி, கதிர் இந்துஜா என பலர் நடித்துள்ளார்கள்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படத்திலிருந்து சிங்க பெண்ணே பாடல் வெளியாகி வைரல் ஆனது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடிய இந்தப் பாடல் மிர்ச்சி top 20 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது, இதனை விஜயின் மக்கள் தொடர்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.