2019 ஆண்டில் ரசிகர் மத்தியில் மொக்கை வாங்கிய டாப் 10 படங்கள்!லிஸ்ட் இதோ உங்கள் பார்வைக்கு!

2019ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் 200க்கும் மேற்பட்ட  படங்கள் வெளியாகி வந்துள்ள நிலையில் அதில் மிகவும் மோசமாக ரசிகர்களால் கிண்டலும்,கேலியும் செய்யப்பட்ட டாப் 10 படங்கள் பின்வருமாறு.

1.விஜயுடன் அட்லி டைரக்டர் அவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து நடித்துள்ள படம் பிகில். இத் திரைப்படம் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் கலந்த திரைப்படமாக வெளியானது இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ஒரு வெற்றிப்படமகும் ஆனால் ரசிகர்கள் மத்தியில் கிண்டலும் கேலியும் நிறைந்த படமாக இருந்து வந்துள்ளது.

2.சூர்யா அவர்கள் என் ஜி கே படத்தின் மூலம் வெற்றி படமாக ஆக்க முடியும் என்ற நிலைமையில் செல்வராகவனின் டைரக்ஷனில் நடிக்க முடிவு எடுத்தார். வெளியான இப்படம் செல்வராகவன் கதையிலிருந்து சற்று மாறுபட்ட கதையாக இருந்தாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்த்த நிலையில் படம் சொல்லிக்கொள்ளும் அளவில் ஓடவில்லை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கிண்டலும் கேலியுமாக அமைந்தது இணையதளத்தில் மிகவும் வைரலாகப் பரவியது.

3.சகோ திரைப்படம் ஒரு மிகப்பெரிய பட்ஜெட் படமாக அமைந்தது இப்படம் மக்கள் மத்தியில் மிக எதிர்பார்ப்பு நிறைந்த நிலையில் ட்ரெய்லர் வெளியாகியது மக்களால் அதிகமாக இணையதளத்தில் பார்க்கப்பட்டது இருப்பினும் இப்படம் வெளியாகும் வெளியாகி ஐந்து நாட்களில் தோல்வியை தழுவியது ஏனென்றால் இப்படம் KGF போலவே இருந்ததால் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதுவே கிண்டலும் கேலியுமாக அமைந்தது.

4.சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது அவர் பல தோல்வி படங்களை கொடுத்த நிலையில் இப்படத்தையாவதுவிட்டுக் கொடுக்கும் நோக்கில் டைரக்டர் ராஜேஷ் அவர்களுடன் கைகோர்த்தார் சிவகார்த்திகேயன் இருப்பினும் இப்படம் கதைக்களம் இல்லாததால் தோல்வியை சந்தித்தது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது.

5.காஞ்சனா 3 ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான இப்படம் வழக்கமான காஞ்சனா போலவே இப்படமும் அதே கதை களத்தை கொண்டுள்ளது இதில் முன்னணி நடிகர்கள் மற்றும் மாறுதல் செய்யப்பட்டு இருந்தனர் இப்படத்தில் அத்தை பெண்ணாக ஓவியா அவர்கள் நடித்திருந்தார்.
இப்படம் இணையதளத்தில் பெரிதாக விமர்சிக்கப்பட்டது இப்படம் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.

6. பிக்பாஸ் பிறகு ஓவியா அவர்கள் நடித்த படம் 90 ml இப்படம் பெண்கள் சுதந்திரம் என பேசப்படும் படமாக மக்கள் மத்தியில் அமையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இப்படம் தோல்வியை தழுவியது. கதைகளும் சரியில்லாததால் இப்படம் தோல்வியை சந்தித்த அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டது மற்றும் கிண்டலும் கேலியுமாக ரசிகர்கள் இப்படத்தை விமர்சித்துள்ளனர். ஓவியா அவர்களுக்கு தோல்விப் படமாகவே அமைந்தது அதுமட்டுமல்லாமல் இணைய தளத்தில் ரசிகர்கள் கிண்டலும் கேலியுமாக ட்விட் செய்தனர்.

7. வந்தா ராஜாவாகத்தான் வருவேன் இப்படம் சிம்பு நடிப்பில் வெளியான இப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இருந்தாலும் தமிழ் மொழியில் வெளியாகியது இப்படம் பழைய கதைக்களத்தை கொண்டிருந்தாலும் சிம்புவின் நடிப்பில் சற்று வித்தியாசமாகவே இருந்தது. சிம்புவின் நடிப்பு சிறப்பாக இருந்தது இருப்பினும்இப்படம் சுமாராக ஓடினாலும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது.

8. பல ஹிட் படங்களை கொடுத்த கார்த்தி அவர்கள் இப்பொழுது தேவ் என்ற படத்தில் நடித்தார் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கார்த்தி அவர்களுக்கு புதிய திருப்பு முனையாக அமைந்தது இப்படம் கதைகளம் மற்றும் உருவாக்கும் விதத்தில் கோட்டை விட்டதால் இப்படத்தில் ஒன்றும் இல்லாதது போல காட்சி அளித்தது இதனால் படம் தோல்வியை தழுவியது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உரியதாக இருந்தது.

9. விஷால் நடிப்பில் வெளியான படம் அயோக்கியா இப்படம் விஷாலுக்கு ஒரு திருப்புமுனையாகும் படமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கதைகளம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் படத்தின் கதை சற்று மெதுவாகவே சென்றது எனவே மக்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது படம் சுமாராக ஓடினாலும் ரசிகர்கள் மத்தியில் கிண்டல் கேலி களமாக அமைந்தது விஷால் இதுபோன்ற கதைகளில் இருந்து மாறுபட்டு சற்று வித்தியாசமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

10. பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி படம் ஒரு சிறந்த படமாக அமைந்தது அதேபோல தேவி 2 படம் அவருக்கு வெற்றி படமாக ஆகும் என்ற நினைத்து நடித்திருந்தார் ஆனால் இப்படம் சுமாராகவே ஓடியது இதில் ஹீரோயினாக தமன்னா அவர்கள் நடித்திருந்தார் கதைகளும் சற்று வித்தியாசமாக இருந்ததால் மக்கள் ஏற்கவில்லை எனவே இப்படம் தோல்வியை சந்தித்தது அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் பாதிப்பை அடைந்தது. எனவே ரசிகர்கள் இப்படத்தை கலாய்த்து உள்ளனர்.

Leave a Comment