2020 ஆம் ஆண்டிற்கான டாப் 10 சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட் இதோ!!

0

top 10 serial actress list:வெள்ளித்திரையில் எப்படி நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அது போலவே சின்னத்திரையிலும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இந்தாண்டுக்கான சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சின்னத்திரை நட்சத்திர நடிகைகளின் லிஸ்ட் இதோ.

1. ப்ரீத்தி ஷர்மா – இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 என்ற தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் இந்த சீரியலில் தான் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2.சித்ரா விஜே – இவர் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் அறிமுகமாகி. தற்போது அதே சேனலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முல்லை கதாபாத்திரத்தின் மூலம் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

3.ஆயிஷா- இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். 4. ரோஷினி ஹரிப்ரியன்- இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா இந்த தொடரில் கண்ணம்மா என்கிற  கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் புகழ்பெற்றார்.

5. சுஜிதா பாண்டியன் ஸ்டோர்- இவர் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகியுள்ளார். 6. பிரியங்கா எம் ஜெயன்- விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் காற்றின் மொழி என்ற தொடரில் நாயகியாக அறிமுகமாகி இல்லத்தரசிகளின் மனதில் தற்போது இடம் பெற்றுள்ளார்.

7. ஷபானா ஷாஜகான்- இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

8. பிரியங்கா நல்கரி- இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 9. ரச்சித்தா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் பிரபலமாகி தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 10.பப்ரி கோஷ்- இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி0, பாண்டவர் இல்லம் போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.