வருடம் வருடம் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகிறது. அதில் தமிழில் நூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்து தமிழ் சினிமா பெருமிதம் கொள்கிறது. அதுவும் தற்போழுதெல்லாம் தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் என்னதான் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுவதில்லை. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் முதலுக்கு மோசம் என்ற அளவிற்கும் இருந்து வருகிறது. இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வெற்றியைப் பெற்று வருகிறது.
அந்தவகையில் போட்ட பட்ஜெட்டை விடவும் இரண்டு மூன்று மடங்கு வசூல் செய்து சாதனை படைத்த 10 திரைப்படங்களையும், அந்தத் திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படத்தில் ஹீரோக்கள் யார் மற்றம் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றியும் தற்போது பார்ப்போம்.
பேட்ட : இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்தை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நவாசுதின் சதிப் உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தார்கள் இத்திரைப்படம் 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
சர்க்கார் : முருகதாஸ் இயக்க விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்க்கார். இத்திரைப்படத்தில் மூன்றாவது முறையாக விஜய் மற்றும் முருகதாஸ் இணைந்து இருந்தார்கள். கரு.பழனியப்பன், வரலட்சுமி, சரத்குமார் ஆகியோர்கள் அட்டகாசமாக நடித்திருந்தார்கள் இத்திரைப்படம் 260 கோடி வசூலித்தது.
மெர்சல்: அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக அமைந்த திரைப்படம்தான் மெர்சல். இத்திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார் இத்திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்து 260 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
கபாலி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கபாலி. இத்திரைப்படம் மலேசியா தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தை வைத்துதான் எடுக்கப்பட்டிருந்தது இத்திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளிவந்து 286 கோடி வசூல் செய்தது.
எந்திரன்: இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது முறையான கூட்டணியில் உருவான திரைப்படம் தான் எந்திரன். இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் 2010ஆம் ஆண்டு வெளிவந்து 290 கோடி வசூல் செய்தது.
பிகில் : தளபதி விஜய் மற்றும் அட்லி இவர்களின் மூன்றாவது முறை கூட்டணியின் பொழுது உருவான திரைப்படம் தான் பிகில். இத்திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார். இத்திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளிவந்து 300 கோடி வசூல் செய்தது.
சாஹா : இத்திரைப்படம் பிரபாஸ் நடிப்பில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரிலீசானது. இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டில் வெளிவந்தது 433 கோடிகளை சம்பாதித்து.
பாகுபலி: இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகி அமோக வெற்றியை பெற்ற திரைப்படம் தான் பாகுபலி.இத்திரைப்படத்தில் தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன்,ராணா என ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தார்கள் இத்திரைப்படம் 680 கோடிகளை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
எந்திரன் 2.0: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய்குமார் ஆகியோர்களின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் 2.0 இத்திரைப்படம் எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் 800 கோடி வசூல் செய்தது.
பாகுபலி 2 : இத்திரைப்படம் பாகுபலி முதல் பாகத்தினை தொடர்ந்து இரண்டாம் பாகம் கதையாக எடுக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படமும் மிகவும் பிரமாண்டமாக அமைந்ததால் 1810 கோடிகளை வசூல் செய்து அடித்து நொறுக்கியது.