தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்.! இதோ லேட்டஸ்ட் பட்டியல்

0

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இவர்கள் எத்தனை கோடி வாங்குகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவர்கள் கூறிய நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது, முதலிடத்தில் முடிசூடா மன்னனாக 60 முதல் 65 கோடி வரை சம்பளமாக பெற்று சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் விஜய் 45 முதல் 50 கோடி வரை சம்பளமாக பெற்று கெத்து காட்டி வருகிறார்.

35 முதல் 40 கோடி வரை சம்பளமாக பெற்று மூன்றாவது இடத்தைப் தல அஜித் பிடித்துள்ளார், அதைப்போல் நான்காவது இடத்தில் 30 கோடி சம்பளத்தை பெற்று கமலஹாசன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

சூர்யா 22 கோடி சம்பளமாக பெற்று ஐந்தாவது இடத்திலும், 20 கோடி சம்பளத்துடன் நடிகர் விக்ரம் ஆறாவது இடத்திலும், 15 கோடி சம்பளமாக பெற்று நடிகர் சிவகார்த்திகேயன் ஏழாவது இடத்தை பிடித்து விட்டார். நடிகர் தனுஷ் கார்த்திக் ஆகியோர் 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளமாக பெற்று எட்டாவது இடத்தைப் பிடித்து விட்டார்கள்.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி 8 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார் பத்தாவது இடத்தில் நடிகர் சிம்பு 8 கோடி வரை சம்பளமாக பெற்று 10வது இடத்தை தக்க வைத்துள்ளார்.