டாப் 10 சுரேஷ் குமாருக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகைகள் இவர்கள் தான்.!

0
suresh kumar
suresh kumar

சன் தொலைக்காட்சியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக இருந்தவர் சுரேஷ்குமார் இவர் சன் டிவியில் top 10 கூறுவார், இந்த நிகழ்ச்சி 90’s கிட்ஸ்களுக்கு மிகவும் ஃபேவரட் அதேபோல் ஒரு தொகுப்பாளர் ஒரே நிகழ்ச்சியில் 22 வருடங்களாக இருப்பது எல்லாம் அசாத்தியம் தான்.

அப்படித்தான் சுரேஷ்குமார் 22 வருடங்களாக டாப் 10 நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தவர், இவர் தனது பேச்சு திறமையாலும் தான் உடுத்தும் உடைகளும் மக்களை வெகுவாக கவர்ந்தவர், மேலும் இவர் நீண்ட காலமாக தொலைக்காட்சி பார்க்கும் தலைகாட்டாமல் இருந்தார் தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு பிடித்த ஐந்து தமிழ் நடிகைகள் யார் என்ற விவரத்தை சமீபத்தில் கூறியுள்ளார் அவர்கள் அமலா,ராதா, கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், அமலா பால் ஆகியோர்கள் தானாம்.