TRP -யில் முதல் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. நூலிழையில வாய்ப்பை தவறவிட்ட பாக்கியலட்சுமி சீரியல்

வெள்ளித்திரையில் எப்படி போட்டிகள் இருக்கிறது அதேபோல சின்னத்திரையிலும் டிஆர்பில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொலைக்காட்சிகள் போட்டி போடுகின்றன. குறிப்பாக விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் அதிகம் போட்டி போடுகின்றன.

விஜய் டிவி தொடர்ந்து சீரியல் மற்றும் ரியாலிட்டி  ஷோகளை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வைத்திருக்கிறது. அதனால் டிஆர்பி எப்பொழுதுமே முன்னிலையில் வசிக்கும். குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும்  பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்..

போன்றவை டிஆர்பி – யில் எப்பொழுதுமே உச்சத்தில் இருக்கக்கூடியவை இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது டிஆர்பி – யில் முதல் பத்து இடத்தை பிடித்திருக்கும்  சீரியல்கள் எது என்பது குறித்து தான் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.. நம்பர் ஒன் இடத்தை தனக்கு சொந்தமாகிக்கு உள்ளது விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல்.

இரண்டாவது இடத்திலும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி. மூன்றாவது இடத்தை விஜய் டிவியின் மற்றொரு டாப் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர் கைப்பற்று இருக்கிறது. நான்காவது இடத்தை ஈரமான ரோஜா, ஐந்தாவது இடத்தை ராஜா ராணி 2, ஆறாவது இடத்தை தமிழும் சரஸ்வதியும், அடுத்தடுத்ததாக மௌன ராகம், காற்றுக்கென்ன வேலி, தென்றல் வந்து என்னை தொடும் செல்லம்மா  போன்ற சீரியல்கள் தான் டி ஆர் பி – யில் முதல் பத்து இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பெரும்பாலான சீரியல்கள் விஜய் டிவி என்பது குறிப்பிடத்தக்கது இதனால் விஜய் டிவி தொலைக்காட்சி மேலும் அந்த சீரியல் இயக்குனர்களும் தற்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறதாம்.

Leave a Comment