2022ல் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடிய டாப் 10 திரைப்படங்கள்.! அஜித் விஜய்க்கு எந்த இடம் தெரியுமா..

சினிமாவைப் பொறுத்தவரை பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி அடைகிறது என்றால் அதன் வசூலை பொறுத்துதான் கணிக்க முடியும். அப்படி ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்கிற்கு வருகிறது அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றனவா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் நல்ல கதை உள்ள திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது.

மேலும் சமீப காலமாக இளம் இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருவது அதிலும் அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் வசூலில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்களை தற்போது இங்கே காணலாம். இந்த லிஸ்டில் இதுவரை வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது இனிவரும் திரைப்படங்கள் வசூலில் அதிக வசூல் பெற்றால் இந்த டாப் டென் லிஸ்டில் மாற்றம் ஏற்படும் என தெரிகிறது.

அந்த வகையில் முதல் இடத்தில் பொன்னியின் செல்வன்  500 கோடி வசூல் செய்துள்ளது, இரண்டாவது இடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் 236 கோடி பெற்று பீஸ்ட் திரைப்படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. நான்காவதாக 200 கோடிகள் பெற்று அஜித்தின் வலிமை திரைப்படம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

179 கோடி வசூல் வேட்டை நடத்தி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது அதேபோல் 110 கோடி வசூல் வேட்டை நடத்தி தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.  ஏழாவது இடத்தில் 100 கோடியும் வசூல் செய்துள்ளது சர்தார், எட்டாவது இடத்தில் லவ் டுடே எழுவது கோடியும் ஒன்பதாவது இடத்தில் வெந்து தணிந்தது காடு 60 கோடியும் 10 வது இடத்தில் விருமன் அறுவது கோடியும் பெற்றுள்ளது.

love today
love today

Leave a Comment