2022-ல் அதிக ரன்கள் அடித்த டாப் 10 வீரர்கள்..! லிஸ்ட்டில் இடம் பிடிக்க தவறிய வீராட் கோலி.

இந்த ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. இந்த வருடத்தில் மூன்று வடிவிலான போட்டியிலும் அதிக ரன்கள் அடித்து பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாவும் 46 இன்னிங்ஸில் 16 அரை சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 2215 ரன்கள் குவித்து முதலிடத்தைப் பற்றி தெரிகிறார்.

அடுத்ததாக வங்கதேச அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 46 இன்னிங்ஸில்  1780 ரன்கள், பாகிஸ்தான் முகமது ரிஸ்வான் 43 இன்னிங்ஸில் 1532 ரன்கள் இவர்கள் இருவரும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றனர் இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் 360 என செல்லமாக அழைக்கப்படும்..

அதிரடி ஆட்டக்காரர்  சூர்யா குமார் யாதவ் 43 இன்னிங்ஸில் 10 அரை சதம் இரண்டு சதங்கள் உட்பட 1424 ரன்கள் குவித்து நான்காவது இடத்தை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். அடுத்த இடத்தை இந்திய அணியின் மற்றோரு வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 32 இன்னிங்ஸில் 12 அரைசதம், ஒரு சதம் உட்பட 1407 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்..

இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித் 1398 ரன்கள் அடித்து அசத்தி இருக்கிறார், அடுத்த இடத்தை ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர ஆள் கவுண்டர் சிக்கந்தர் ராசா  1380 ரன்கள் குவித்து இருக்கிறார். இங்கிலாந்து அணியின் ஜானி போர்ஸ்டோவ் 1316 ரன்கள் இலங்கையின் பத்தும் நிசங்கா 1314..

நியூசிலாந்த் அணியின் கான்வே 1307 ரன்கள் குவித்து உள்ளார் இவர்கள்தான் முதல் பத்து இடத்தை பிடித்திருக்கின்றனர். 11 வது இடத்தை விராட் கோலி 1303, ரிஷப் பந்த் 1232 ரன்கள் 15-வது இடத்தை பிடித்திருக்கிறார் ரோஹித் சர்மா 995 ரன்கள் அடித்து 24 வது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment